மதுரை விமான நிலையம் வந்த பெண் பயணியிடம் துப்பாக்கி குண்டுகள்: அதிகாரிகள் விசாரணை
மதுரை விமான நிலையத்திலிருந்து இன்று 12.30 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய விமான பயணிகளிடம் சோதனை செய்தபோது


மதுரை விமான நிலையத்திலிருந்து இன்று 12.30 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய விமான பயணிகளிடம் சோதனை செய்தபோது பெண் பயணி ஒருவரின் உடமைகளில் 5 உபயோகப்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டா குப்பிகளும், 3 உபயோகப்படுத்தப் படாத துப்பாக்கி குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் முதல் கட்ட விசாரணையில் அவர் பெயர் புகாடியா லெஷ்மி லாவன்யா (வயது 41) என்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. துப்பாக்கி தோட்டக்கள் அவரிடம் எப்படி வந்தது, உபயோகப்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் ஏதேனும் அசம்பாவித சம்பவத்திற்காக உபயோகப்படுத்தப்பட்டதா, அவருக்கு நக்சல் அமைப்பு போன்ற ஏதேனும் அமைப்புகளுடன் தொடர்பா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் துப்பாக்கி தோட்டாக்கள் பிடிபட்டது சம்பந்தமாக விமான நிலைய அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் பெருங்குடி காவல் நிலையத்தில் ஆந்திரப் பெண் மற்றும் அவரிடமிருந்த துப்பாக்கி தோட்டாக்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...