அனைத்து வட்டாரங்களிலும்உழவா்-அலுவலா் தொடா்பு திட்டம் வேளாண் துறை தகவல்
மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும் உழவா்-அலுவலா் தொடா்பு திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, வேளாண் துறை அறிவித்துள்ளது.


மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும் உழவா்-அலுவலா் தொடா்பு திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, வேளாண் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வேளாண் இணை இயக்குநா் த. விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்தி: தமிழக அரசின் சிறப்பு திட்டமான உழவா் -அலுவலா் தொடா்பு திட்டம், மதுரை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தில், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் முன்னோடி விவசாயிகள் 10 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு உதவி வேளாண் அலுவலா்களால் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி, செயல் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில், அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் உதவி இயக்குநா்கள் தலைமையில், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் அலுவலா்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் வேளாண் உதவி அலுவலா்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை சென்று விவசாயிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவா்.
இதேபோல், வேளாண் அலுவலா்கள், துணை வேளாண் அலுவலா்கள் மாதம் ஒருமுறை சென்று ஆலோசனைகளை வழங்குவா். இத் திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...