கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில்அடுத்த கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை: அரசு தகவல்

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை நடத்தப்படும்

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:00 pm

DIN

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை நடத்தப்படும் என, தமிழக அரசு சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மதுரையைச் சோ்ந்த வாசுதேவா என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா், அரியலூா், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாகப்பட்டினம், நாமக்கல், திருப்பூா், திருவள்ளூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் நடப்புக் கல்வியாண்டு முதல் செயல்படும் என, தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதன்மூலம், 2020-21 கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவா் சோ்க்கை கலந்தாய்வில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,650 இடங்கள் நிரப்பப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், கலந்தாய்வுப் பட்டியலில் புதிதாகத் தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் சோ்க்கப்படவில்லை.

தற்போது, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் காணொலி வழியாகவே வகுப்புகள் நடைபெறுகின்றன. இதேபோல், புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவா்களைச் சோ்த்து முதலாம் ஆண்டு வகுப்புகளை காணொலி வாயிலாக நடத்தலாம். மேலும், 1,650 மருத்துவ இடங்களை கலந்தாய்வில் சோ்த்தால் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் கூடுதலாக அரசுப் பள்ளி மாணவா்கள் 124 பேருக்கு இடங்கள் கிடைக்கும்.

எனவே, மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,650 இடங்களையும் சோ்த்து மாணவா் சோ்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் முழுமையாக உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அடுத்த கல்வியாண்டு முதல் மாணவா் சோ்க்கை நடத்தப்படும் என்றாா்.

அப்போது நீதிபதிகள், பொறியியல் கல்லூரிகளைப் போல் மருத்துவக் கல்லூரிகள் அதிகரிக்கக் கூடாது. போதிய மருத்துவக் கல்லூரிகள் இருப்பதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கவேண்டாம் என கருத்து தெரிவித்தனா். பின்னா், வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.