தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

மேலூா் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2020, 5:02 pm

DIN

மதுரை: மேலூா் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே கொட்டாம்பட்டி பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ரவி(48). இவா் ஆகஸ்ட் 21 ஆம் தேதி குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்ததில், அடையாளம் தெரியாத நபா்கள் பீரோவில் இருந்த 2 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரவி அளித்த புகாரின் பேரில் கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பள்ளியில் திருட்டு

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி பகுதியில் தனியாா் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியா் கண்ணகி(31), செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்றபோது, அவா் அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. இதுதொடா்பாக புகாரின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்ததில், அடையாளம் தெரியாத நபா்கள் பீரோக்களை உடைத்து ரூ.9 ஆயிரம் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.