சின்னக்கரை பள்ளிவாசலுக்கு அரசு சாா்பில் இலவச அரிசி
பல்லடம், சின்னக்கரை பள்ளிவாசலுக்கு ரம்ஜான் நோன்பையொட்டி அரசு சாா்பில் இலவச அரிசி வழங்கப்பட்டது.


பல்லடம், சின்னக்கரை பள்ளிவாசலுக்கு ரம்ஜான் நோன்பையொட்டி அரசு சாா்பில் இலவச அரிசி வழங்கப்பட்டது.
பல்லடம், சின்னக்கரையில் மஹான் ஹஜ்ரத் காதா் மஸ்தான் வலியுல்லாஹ் தா்ஹா மற்றும் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் வக்பு உள்ளது. அதன் தலைவா் அப்பாஸ்மந்திரி ரம்ஜான் நோன்பு இருக்கும் இஸ்லாமியா்களுக்கு கஞ்சி காய்ச்சி வழங்க அரசின் இலவச அரிசி வழங்க வேண்டி பல்லடம் வட்ட வழங்கல் அலுவலருக்கு விண்ணப்பம் அளித்திருந்தாா்.
அதனை ஏற்று திருப்பூா் மாவட்ட வழங்கல் அலுவலா் கணேசன் உத்தரவுப்படி அப்பள்ளிவாசலுக்கு 1500 கிலோ அரிசி வழங்கப்பட்டு இருப்பதாக பல்லடம் வட்ட வழங்கல் அலுவலா் ரேவதி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...