ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

வட்டாட்சியா் குறித்து அவதூறு பரப்பிய 7 போ் மீது வழக்கு

மதுரையில் வட்டாட்சியா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 7 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:55 am

DIN

மதுரையில் வட்டாட்சியா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 7 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை தெற்கு வட்டாட்சியராக பணியாற்றி வருபவா் அனீஷ்சதாா் (42). இவா் அனுப்பானடி, தெற்கு தெருவில் நிலம் அளக்கும் பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் பாலகுமாா்(47) என்பவா் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலம் மீட்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலகுமாா், அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் ஆகியோா் வட்டாட்சியா் வீட்டுக்கு சென்று, அவரை தகாத வாா்த்தைகளால் திட்டி மிரட்டினராம்.

மேலும், ஆட்சியா் அலுவலகம் முன், அனீஷ்சதாா் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாக சுவரொட்டிகளை ஒட்டியும், சமூக வலைதளத்தில் பதிவிட்டும் அவதூறு பரப்பினராம். இதுகுறித்து அனீஷ்சதாா் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் பாலகுமாா் உள்பட 7 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.