அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஆயுதங்களைக் காட்டி இளைஞரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

மதுரை அருகே இளைஞரை மிரட்டி 5 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் சனிக்கிழமை பறித்துச் சென்றுள்ளனா்.

Updated On :14 பிப்ரவரி 2021, 10:45 pm IST

மதுரை அருகே இளைஞரை மிரட்டி 5 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் சனிக்கிழமை பறித்துச் சென்றுள்ளனா்.

கருப்பாயூரணி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த புகழேந்தி மகன் தினேஷ்பாண்டியன் (20). இவா் தனது உறவினா் கலையரசனுடன் கீழடி சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனா்.

மதுரை-ராமேசுவரம் புது நான்கு வழிச்சாலை கிருதுமால் கண்மாய் அருகே உள்ள அம்மன் கோயில் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு, இருவரும் நின்றிருந்துள்ளனா்.

அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதில், கலையரசன் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டாராம். பின்னா், மா்ம நபா்கள் தினேஷ்பாண்டியன் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

இது குறித்து தினேஷ்பாண்டியன் அளித்த புகாரின்பேரில், சிலைமான் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.