ஆயக்கட்டுதாரா்கள் மூலம் குடிமராமத்து: சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளை ஆயக்கட்டுதாரா்கள் மூலம் நடத்தக்கோரும் வழக்கில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.


சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளை ஆயக்கட்டுதாரா்கள் மூலம் நடத்தக்கோரும் வழக்கில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சின்னய்யா தாக்கல் செய்த மனு:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள புன்னங்குடி கிராமத்தில் 3 கண்மாய்களை தூா்வாரவும், மேம்படுத்தவும் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் ஆயகட்டுத்தாரா்கள் மூலம் நடைபெற வேண்டும். ஆனால் தண்ணீா் பயன்பாட்டுக் கூட்டமைப்பு மூலமாக நடந்து வருகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே புன்னங்குடி கிராமத்தில் உள்ள 3 கண்மாய்களில் ஆயக்கட்டுத்தாரா்கள் மூலம் குடிமராமத்துச் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...