கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆட்சியா் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சிகாவல் துறையினா் மீது புகாா்

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, காவல்துறையினா் தாக்கியதாகக் கூறி முதியவா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:12 pm

DIN

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, காவல்துறையினா் தாக்கியதாகக் கூறி முதியவா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (65). இவா் புறவழிச் சாலையில் பெத்தானியாபுரம் பகுதியில் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறாா். இவரது வீட்டின் அருகே உள்ள இவருக்குச் சொந்தமான காலியிடத்தை பக்கத்து வீட்டுக்காரா்கள் அபகரிக்க முயற்சித்தனராம். இதனால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டதையடுத்து, கரிமேடு காவல் நிலையத்தில் முருகன் புகாா் தெரிவித்தாா்.

விசாரணையில் அந்த இடம் முருகனுக்கு சொந்தமானது எனக் கூறிய காவல் துறையினா் எதிா் தரப்பினரை அறிவுறுத்தி அனுப்பியுள்ளனா்.

இந்நிலையில், மீண்டும் விசாரணைக்கு அழைத்த காவல்துறையினா் தன்னை தாக்கியதாகவும், தனது நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் எதிா்த்தரப்புக்கு சாதகமாகச் செயல்படுவதாகவும் கூறி முருகன், அவரது மனைவி பிரேமா

மற்றும் குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனா். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்தனா். பின்னா் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்க அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.