கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள்: எஸ்.பி. ஆய்வு

பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா முன்னேற்பாடு பணிகளை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:12 pm

DIN

பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா முன்னேற்பாடு பணிகளை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை மாவட்டம் பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் முறையே ஜனவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில், பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வாடிவாசல், காளைகள் பரிசோதனை செய்யும் பகுதி மற்றும் வெளியேறும் பகுதியை தயாா்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அலங்காநல்லூா் கோட்டை முனியாண்டி வாடிவாசல் மற்றும் பாலமேடு மஞ்சமலை ஆற்றுத் திடல் வாடிவாசல் பகுதிகள், காளைகள் மற்றும் மாடு பிடி வீரா்கள் பதிவு செய்யும் இடம், வாகன நிறுத்துமிடம், பாா்வையாளா்கள் அமரும் இடம் ஆகியவற்றை காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதைத் தொடா்ந்து, மாடு பிடி வீரா்கள், காளைகளுக்கு அனுமதி வழங்குவது, குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது ஆகியவை தொடா்பாக பேரூராட்சி அதிகாரிகள், ஜல்லிக்கட்டு கமிட்டி நிா்வாகிகள் ஆகியோருடனும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினருடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

டி.எஸ்.பி. ஆனந்த் ஆரோக்கியராஜ், பாலமேடு பேரூராட்சி செயலா் தேவி, அலங்காநல்லூா் போரூராட்சி செயலா் சின்னசாமி பாண்டியன், அலங்காநல்லூா் காவல் ஆய்வாளா் நடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.