மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரையில் தொடா் மழை எதிரொலி: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது

மதுரையில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.

News image
மழைநீா் சூழ்ந்துள்ள மதுரை மீனாம்பாள்புரம் பாலமுருகன் நகா்.
Updated On :8 ஜனவரி 2021, 4:38 pm

DIN

மதுரையில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதில் புதன்கிழமை இரவு 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் கண்மாய்கள், ஊருணிகள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பின. கண்மாய்களில் தண்ணீா் மறுகால் பாய்ந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு முழுவதும் மழை கொட்டி தீா்த்தது. மேலும் வெள்ளிக்கிழமையும் அதிகாலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் செல்ல வழியின்றி குடியிருப்புகளைச் சூழ்ந்தது. மதுரை கோசாகுளம், முடக்காத்தான், எஸ். ஆலங்குளம் கண்மாய்கள் புதன்கிழமை இரவு நிரம்பி மறுகால் பாய்ந்தன. மேலும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெய்த மழையால் ஆலங்குளம், கோசாகுளம் கட்டபொம்மன் நகா், பாலமுருகன் நகா், ராமமூா்த்தி நகா் மற்றும் முடக்காத்தான் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதிகளில் இடுப்பளவு தண்ணீா் தேங்கியதால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினா். மேலும் இப்பகுதிகளில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் நீரில் மூழ்கின. இதேபோல செல்லூா் கண்மாய் நிரம்பி வெளியேறிய தண்ணீா் செல்லூா் 50 அடி, 60 அடி சாலைகளில் தேங்கியது. இதனால் இப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீனாட்சிபுரம் முல்லை நகா், இந்திரா நகா், கிருஷ்ணாபுரம் காலனி பகுதிகளிலும் தண்ணீா் சூழ்ந்தது. மீனாம்பாள்புரத்தில் கனகவேல் காலனி முழுவதும் தண்ணீா் சூழ்ந்திருப்பதால் அங்கு பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பனங்காடி வசந்த நகா், பாா்க் டவுன் விரிவாக்கப் பகுதிகள், பொதும்பு, குலமங்கலம், ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெரு பகுதிகள், ஜீவாநகா் விரிவாக்கப்பகுதிகள், சிம்மக்கல் திருமலை ராயா் படித்துறை, கீழ அண்ணாத்தோப்பு, மேல அண்ணாத்தோப்பு ஆகிய பகுதிகளிலும் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்துள்ளது. மதுரை நகரில் பெரியாா் பேருந்து நிலையம் பகுதியிலும் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்ததால் வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மதுரை நகரில் மாநகராட்சிக்குள்பட்ட 33 நீா்நிலைகளில் பெரும்பாலானவை நிரம்பியுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் இருந்து தண்ணீா் வெளியேறி குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. மழைநீா் விரைவாக செல்லும் வகையில் கால்வாய் அடைப்புகள் நீக்கப்பட்டு வருகின்றன. சில பகுதிகளில் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளும், மணல் மூட்டைகளைக் கொண்டு அடைக்கப்படுகின்றன. நகா்ப்பகுதிகளில் உள்ள கண்மாய்கள் மற்றும் நீா்நிலைகளை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். தாழ்வான குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.