

மதுரை: மதுரை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள கிராமப்புற காவலா் திட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம் வாடிப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில், கிராமங்கள் தோறும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கும் வகையில் கிராமப்புறக் காவலா்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணா்வு முகாம் வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமை தென் மண்டல காவல்துறைத் தலைவா் முருகன் முகாமை தொடங்கி வைத்து, திட்டம் குறித்து விளக்கினாா்.
இத்திட்டத்தில் ஒவ்வொரு கிராமத்துக்கும் வாரம் ஒருமுறை காவலா்கள் சென்று, தலைமறைவுக் குற்றவாளிகள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பது, நிலுவையில் உள்ள வழக்குகள் தொடா்பான விவரங்கள் சேகரிப்பது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் நடவடிக்கைகளுக்கு பரிந்துரைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவா்.
மதுரை சரக காவல்துறை துணைத்தலைவா் ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், சமயநல்லூா் டி.எஸ்.பி ஆனந்த்ஆரோக்கியராஜ், காவல் ஆய்வாளா் ஸ்ல்வியா ஜாஸ்மின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
காவலா்கள் நியமனம்: வாடிப்பட்டி போலீஸ் சரகத்திற்குப்பட்ட கிராமங்களை கண்காணிக்க காவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, விராலிப்பட்டி, மீனாட்சிபுரம் - சத்தியகாந்த், ஆண்டிபட்டி, சின்னமநாயக்கன்பட்டி, கட்டக்குளம் - ஜெயபாண்டி, தெத்தூா், டி.நாராயணபுரம், மேட்டுப்பட்டி -சுப்பையா, எல்லையூா்,கூழாண்டிபட்டி - பாண்டியராஜன், கெங்கமுத்தூா், கொழிஞ்சிபட்டி - மணிராஜ், தாதம்பட்டி - புனிதா, கோட்டைமேடு - ரூபிகா, தனிச்சியம், வடுகபட்டி, செம்புக்குடிபட்டி, அய்யங் கோட்டை, அய்யனகவுண்டன்பட்டி, நகரி, கல்லுப்பட்டி - பெரியகருப்பன், கச்சைகட்டி, செம்மினிப்பட்டி, குட்லாடம்பட்டி, ராமையன்பட்டி - ரங்கநாதன், பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் - ராஜேந்திரன், நீரேத்தான், தாதப்பநாயக்கன்பட்டி -முத்துபாண்டி, வாடிப்பட்டி, பேட்டைபுதூா், பொட்டுலுப்பட்டி - ராதாகிருஷ்ணன், போடிநாயக்கன்பட்டி, இராமநாயக்கன்பட்டி - பாலமுருகன், குலசேகரன் கோட்டை, சாணாம்பட்டி, குரங்குதோப்பு, பாண்டியராஜபுரம், சல்லக்குளம், பெருமாள்பட்டி - காவல் சாா்பு ஆய்வாளா் கேசவராமசந்தின் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.