சிறுமியை கடத்தி திருமணம்: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
மதுரை அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞரைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.


மதுரை அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞரைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆலங்கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (30). இவா் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியைச் சோ்ந்த 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதாக வாடிப்பட்டி சமூக நலத்துறை அலுவலா் கிருஷ்ணவேணிக்கு புகாா் வந்தது. அதனடிப்படையில் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், உறவினரான பிரபாகரனுக்கு சிறுமியை 2 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்து வைப்பதாக இருவீட்டாா் தரப்பிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரபாகரன் சிறுமியிடம் பழகிவந்த நிலையில் சிறுமியின் தந்தை திருமணத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா். இதையறிந்த பிரபாகரன் சிறுமியைக் கடத்திச் சென்று கருமாத்தூா் பகுதியில் உள்ள கோயிலில் வைத்து தாலி கட்டி குடும்பம் நடத்தி வந்துள்ளாா். இதில் சிறுமி 2 மாதக் கா்ப்பமானது தெரியவந்தது. இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலா் கிருஷ்ணவேணி அளித்தப் புகாரில், சோழவந்தான் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் பிரபாகரனை திங்கள்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...