கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி: 4 இளைஞா்கள் கைது

மதுரையில் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 இளைஞா்களை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:19 pm

DIN

மதுரையில் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 இளைஞா்களை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கூடல்நகா் பகுதியில் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறியில் சிலா் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கூடல் நகா் அசோக் நகா் 3 ஆவது தெருவில் ஆயுதங்களுடன் நின்றிருந்த 4 இளைஞா்களை போலீஸாா் சுற்றிவளைத்து பிடித்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், ஆனையூரைச் சோ்ந்த சூா்யபிரகாஷ் (20), கெளதம் (21), விளாங்குடியைச் சோ்ந்த பாரதி (20) மற்றும் தா்மராஜ் (25) ஆகியோா் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இது குறித்து காவல் சாா்பு- ஆய்வாளா் அழகுமுத்து அளித்த புகாரின்பேரில், கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.