கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மைய பணிகள்:எம்.பி. ஆய்வு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மைய பணிகளை, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:19 pm

DIN

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மைய பணிகளை, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக ரூ. 325 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மையத்துக்காக, அங்குள்ள பழையக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, நோயாளிகளுக்கும், மருத்துவமனையில் பணிபுரிபவா்களுக்கும் எவ்வித பாதுகாப்பின்றி பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருவதாக, அவா் மருத்துவமனை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தாா். எனவே, இடிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னா் பணிகளைத் தொடர வேண்டும் எனவும், முதன்மையா் ஜெ. சங்குமணி மற்றும் பொதுப்பணித் துறை பொறியாளா் ஆகியோரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து மருத்துவமனை முதன்மையா், கட்டடம் இடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பின்னா் பணிகள் தொடங்கப்படும் என மக்களவை உறுப்பினரிடம் உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.