தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உசிலம்பட்டியில் இடியுடன் கூடிய கனமழை 

உசிலம்பட்டி பகுதியில் புதன்கிழமை மாலை இரண்டு மணி நேரமாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

News image
Updated On :1 ஜூலை 2021, 12:30 pm

DIN

உசிலம்பட்டி பகுதியில் புதன்கிழமை மாலை இரண்டு மணி நேரமாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் ஒரு மணிநேரம் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் போத்தம்பட்டி ஊராட்சி நக்கலபட்டி ஊராட்சி  வாலாந்தூர் பெருமாள்பட்டி மலைப்பட்டி சமத்துவபுரம் நல்லதேவன்பட்டி, மாதரை, வலையபட்டி, அல்லிகுண்டம், மானூத்து, தொட்டப்ப நாயக்கனூர், குப்பணம்பட்டி, செல்லம்பட்டி, எழுமலை என பல்வேறு கிராமங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை  2 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. 

இப்பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், புதன்கிழமை பெய்த மழையால் வெப்பத்தை தணித்து குளிா்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போன்று 2 நாட்கள் மழை பெய்தால் கண்மாய்கள் குளங்கள் நிரம்பி விடும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இடி மின்னலுடன் மழை பெய்ததால் 2 மணிநேர மின்சாரம் நிறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.