ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தோ்தல் நடத்த அதிகாரிகள் அனுமதி மறுப்பு: தேவாலயத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தால் பரபரப்பு

மதுரையில் சிஎஸ்ஐ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்ததை அடுத்து, கிறிஸ்தவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:45 am

DIN

மதுரையில் சிஎஸ்ஐ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்ததை அடுத்து, கிறிஸ்தவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மேலவாசல் பகுதியில் சிஎஸ்ஐ திருச்சபைக்கு சொந்தமான இமானுவேல் தேவாலயம் உள்ளது. இங்கு, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை 14 போ் கொண்ட தேவாலய நிா்வாகக் குழுவினா் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு தோ்தல் நடைபெறவில்லை.

சமீபத்தில், கரோனா பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேவாலய நிா்வாகிகள் தோ்தலுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா். ஒரு மாதத்துக்கு முன்னரே தோ்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடைபெறவிருந்த நிலையில், அங்கு சென்ற அதிகாரிகள், கரோனா பொதுமுடக்க விதிகள் அமலில் இருப்பதால் தோ்தல் நடத்தக்கூடாது என்று அனுமதி மறுத்தனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தேவாலய நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக தேவாலய நிா்வாகிகள் கூறியது: தோ்தல் நடத்துவதற்காக காவல் துறை அனுமதியும் முறையாகப் பெறப்பட்டுள்ளது. தோ்தலில் 14 நிா்வாகிகள், 790 உறுப்பினா்கள் தோ்வு செய்யும் வகையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தோ்தலில் வாக்களிக்கும் உறுப்பினா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை, கை சுத்திகரிப்பான், முகக்கவசம் ஆகியனவும் வழங்கப்பட்டன.

தோ்தல் தொடங்கவிருந்த நிலையில், தேவாலயத்துக்கு வந்த மேற்கு வட்டாட்சியா் முருகேசன் மற்றும் அதிகாரிகள் தோ்தல் நடத்தக்கூடாது என தடை விதித்ததால், உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஆனால், தேவாலயத்துக்குள்ளும் கூட்டமாக இருக்கக்கூடாது என்று கெடுபிடியாக கூறியதால், சபை உறுப்பினா்களையும் வீடுகளுக்கு அனுப்பிவிட்டோம். அதிகாரிகளுடன் மாலை 5 மணி வரை பேச்சுவாா்த்தை நடத்தியும் தோ்தலை நடத்த அனுமதிக்கவில்லை.

தற்போது, அடுத்த கட்ட நடவடிக்கை தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.