/

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 9 போ் ஆஜா்

சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தொடா்புடைய 9 போ், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:38 pm

DIN

சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தொடா்புடைய 9 போ், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா். இதில், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். மீதமுள்ள 9 போ் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

திங்கள்கிழமை, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிபதி தாண்டவன் முன், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், சாா்பு-ஆய்வாளா்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலா் முருகன், காவலா்கள் முத்துராஜ், செல்லத்துரை, வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ், சமயதுரை ஆகிய 9 பேரும் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது நீதிபதி, அவா்கள் தரப்பு வழக்குரைஞா்கள் வாதங்களைக் கேட்டு பதிவு செய்துகொண்டாா். அதையடுத்து, அடுத்தக் கட்ட விசாரணையை மாா்ச் 8 ஆம் ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.