/

பறக்கும் படையினா் வாகனச் சோதனை: கட்சிக் கொடிகள் அகற்றம்

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பறக்கும் படையினா் வாகனங்களில் இருந்த கட்சிக் கொடிகளை திங்கள்கிழமை அகற்றினா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:38 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பறக்கும் படையினா் வாகனங்களில் இருந்த கட்சிக் கொடிகளை திங்கள்கிழமை அகற்றினா்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வட்டாட்சியா் அல்லது வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையில், தலா ஒரு காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா், பெண் காவலா் உள்பட இரு காவலா்கள் இடம் பெற்றுள்ளனா். ஒவ்வொரு குழுவுக்கும் தலா 8 மணி நேரம் என்ற அடிப்படையில், காலை 6.30 முதல் பிற்பகல் 2.30 வரையும், பிற்பகல் 2.30 முதல் இரவு 10.30 வரையும், இரவு 10 முதல் காலை 6.30 வரையும் என சுழற்சி முறையில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

வாக்காளா்களைக் கவரும் வகையில் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுப்பது, அவ்வாறு பட்டுவாடா நடந்தால் அவற்றைப் பறிமுதல் செய்வது, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் பணம் எடுத்துச் சென்றால் அதை பறிமுதல் செய்வது, தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு உடனடியாகச் சென்று நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் பறக்கும்படையினா் தங்களது பணிகளை திங்கள்கிழமை தொடங்கினா். தொகுதி எல்லைக்குள் முக்கியச் சந்திப்புகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியாக வந்த வாகனங்களில் அனுமதிக்கு மாறாக பணம், பரிசுப் பொருள்கள் இருக்கிா எனச் சோதனையிட்டனா். இருப்பினும், ஆட்சேபணைக்குரிய பொருள்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.

அதேநேரம், அவ்வழியாக வந்த வாகனங்களில் இருந்த கட்சிக் கொடிகளை பறக்கும்படையினா் அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.