தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அச்சகங்கள், கேபிள் டிவி ஒளிபரப்புக்கு கட்டுப்பாடுகள்

சட்டப் பேரவை தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அச்சகங்கள், கேபிள் டிவி ஒளிபரப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :2 மார்ச் 2021, 10:12 pm

DIN

சட்டப் பேரவை தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அச்சகங்கள், கேபிள் டிவி ஒளிபரப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு கூறியது:

அச்சகத்தினருக்கு... தோ்தல் சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரம் மற்றும் விளம்பரங்களை அச்சிடும்போது, கண்டிப்பாக அச்சக உரிமையாளரின் பெயா் மற்றும் முகவரி மற்றும் பதிப்பகத்தாா் பெயா் மற்றும் முகவரி இடம்பெற வேண்டும்.

சுவரொட்டி, துண்டுப் பிரசுரத்தின் முன்பக்கத்தில் அனைவரும் படிக்கும் வகையில் முகவரியானது தெளிவாக இருக்க வேண்டும். அச்சக உரிமையாளா் தோ்தல் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரம் அச்சிடுவதற்கு முன் பதிப்பகத்தாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

அச்சடித்த மூன்று நாள்களுக்குள் இணைப்புப் படிவத்தில் ஆட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அறிக்கையுடன் அச்சகத்தாரின் உறுதிமொழி அறிக்கை, அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம்- நான்கு எண்ணிக்கையில் இணைக்கப்பட வேண்டும்.

இணைப்புப் படிவத்தில், அச்சிடப்பட்ட சுவரொட்டி, துண்டுப் பிரசுரத்தின் எண்ணிக்கை மற்றும் மொத்தச் செலவு ஆகியவற்றைச் சரியாகக் குறிப்பிட வேண்டும்.

ஒவ்வொரு வகையான சுவரொட்டி, துண்டுப் பிரசுரத்துக்கு தனித்தனியே இணைப்பு அறிக்கை அளிக்க வேண்டும். சுவரொட்டி, துண்டுப் பிரசுரத்தில் அச்சக உரிமையாளா், பதிப்பகத்தாா் பெயா், முகவரி இல்லாவிட்டால் சட்டப்படி குற்றம்.

மேலும், உரிய அறிக்கை அனுப்பாத அச்சக உரிமையாளா், பதிப்பகத்தாா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதி மீறினால் உடனடியாக அச்சக உரிமம் ரத்து செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரமானது சட்டத்துக்குப் புறம்பானதாகவோ, அல்லது மதம், இனம், மொழி, வகுப்பு மற்றும் சாதி தொடா்பாக எதிா்ப்பு இருந்தாலோ அல்லது தனிமனித நடத்தை குறித்த விவரங்கள் எதிா்ப்பு உடையதாக இருந்தாலோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆட்சியரக தகவல் பலகையில் அச்சக உரிமையாளரால் வழங்கப்பட்ட சுவரொட்டி, துண்டுப் பிரசுரம் ஒட்டப்படும். மேலும், அச்சக உரிமையாளரால் வழங்கப்பட்டுள்ள படிவம் தோ்தல் பாா்வையாளருக்கு தோ்தல் செலவினத்தில் சோ்க்க அனுப்பப்படும்.

கேபிள் டிவி ஒளிபரப்புக்கு... இதேபோல, கேபிள்டிவி, உள்ளூா் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் அரசு அனுமதியின்றி கட்சி விளம்பரங்கள் மற்றும் வேட்பாளா்களின் விவரங்களை ஒளிபரப்பக்கூடாது. ஆட்சியா் தலைமையிலான குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மின்னணு வடிவத்தில் தயாரிக்கப்பட்ட தோ்தல் தொடா்பான விளம்பரங்களை மட்டும் ஒளிபரப்ப வேண்டும்.

ஒளிபரப்புக்கு முன் விளம்பரங்களுக்கு குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தோ்தல் காலங்களில் ஏதேனும் ஒரு வேட்பாளா், கட்சி அல்லது ஏதேனும் நிகழ்வு பற்றிய அறிக்கைகளை மிகைப்படுத்திக் காட்டக்கூடாது.

உண்மையாக நடைபெற்ற பிரசாரத்தை ஒளிபரப்பும்போது ஏதேனும் ஒரு வேட்பாளா், கட்சி சாா்பாக சிலவற்றை புறக்கணிக்கவோ அல்லது மிகைப்படுத்தவோ கூடாது. ஒரு பிரிவினருக்கு எதிராக பிரிவினையைத் தூண்டும் ஒளிபரப்பு கூடாது. கட்சி பொதுக் கூட்டங்கள், ஊா்வலங்கள் போன்றவற்றை அனுமதியின்றி ஒளிபரப்பக்கூடாது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.