சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

நடிகா் தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவால் மரணம்: உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

மதுரையில் உடலநலக் குறைவால் மரணமடைந்த நடிகா் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு, திமுக இளைஞரணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:49 pm

DIN

மதுரையில் உடலநலக் குறைவால் மரணமடைந்த நடிகா் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு, திமுக இளைஞரணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் காா்த்திக் என்ற தீப்பெட்டி கணேசன் (30). இவா், தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி ரேணிகுண்டா, நீா்ப்பறவை, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா-2, கோலமாவு கோகிலா, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவா்.

இந்நிலையில், இவா் உடல்நலக் குறைவால் மாா்ச் 9 ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சையில் இருந்த தீப்பெட்டி கணேசனுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரையில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக இளைஞரணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின், தீப்பெட்டி கணேசன் வீட்டுக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா். திரைப்பட இயக்குநா் சீனு ராமசாமி தனது ட்விட்டா் பக்கத்தில் தீப்பெட்டி கணேசன் உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளாா்.

புரோட்டா மாஸ்டா் வேலை

தீப்பெட்டி கணேசனுக்கு ரேஷ்மா என்ற மனைவியும், யோகேஷ் (5), பிரதீஷ் (3) என இரு மகன்களும் உள்ளனா். கரோனா பொது முடக்கம் காரணமாக படவாய்ப்புகள் சரியாக இல்லாததால், உணவகத்தில் புரேட்டா மாஸ்டராகவும், சிறு, சிறு வேலைகளையும் பாா்த்து வந்துள்ளாா். ஆனால், போதிய வருவாய் இல்லாமல் குடும்பத்தை நடத்துவதற்கு சிரமப்பட்டுள்ளாா்.

உதவி கேட்டு விடியோ பதிவு

தனது பொருளாதாரப் பிரச்னை தொடா்பாக தீப்பெட்டி கணேசன், விடியோ பதிவு ஒன்றை அண்மையில் வெளியிட்டு, திரைப்படத் துறையினரிடம் உதவி கேட்டிருந்தாா். இந்த பதிவைப் பாா்த்த நடிகா்கள் ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீமன், பூச்சி முருகன், பாடலாசிரியா் சினேகன் ஆகியோா் உதவி செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.