/

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 168 வேட்பாளா்கள் போட்டி

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 168 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 3 தொகுதிகளில் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:49 pm

DIN

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 168 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 3 தொகுதிகளில் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மதுரை மாவட்டத்தில் மேலூா், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 10 தொகுதிகள் உள்ளன. இத் தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 293 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பரிசீலனையின்போது, 97 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, தகுதியுள்ள 196 மனுக்கள் ஏற்கப்பட்டன. 28 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் 168 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தொகுதிவாரியாக போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை விவரம்: மேலூா் - 15, மதுரை கிழக்கு-15, சோழவந்தான் -20, மதுரை வடக்கு-15, மதுரை தெற்கு-13, மதுரை மையம் -14, மதுரை மேற்கு-15, திருப்பரங்குன்றம் -23, திருமங்கலம்-23, உசிலம்பட்டி-14.

3 தொகுதிகளில் இரு இயந்திரங்கள்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமானது வாக்குப் பதிவு பிரிவு (பேலட் யூனிட்), கட்டுப்பாட்டுப் பிரிவு (கன்ட்ரோல் யூனிட்), வாக்களித்ததை உறுதி செய்யும் பிரிவு (விவிபேட்) என 3 பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்.

வாக்குப் பதிவு பிரிவில், வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு வாக்குப் பதிவு பிரிவில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைத் தோ்வு செய்யும் நோட்டா உள்ளிட்ட 16 வேட்பாளா்கள் பெயா்களை இடம்பெறச் செய்யலாம். எனவே, 15 வேட்பாளா்களுக்கு மேல் இருந்தால் கூடுதலாக ஒரு வாக்குப் பதிவு பிரிவு இணைக்க வேண்டும்.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் (20 வேட்பாளா்கள்), திருப்பரங்குன்றம் (23 வேட்பாளா்கள்), திருமங்கலம் (24 வேட்பாளா்கள்) ஆகிய 3 தொகுதிகளிலும் கூடுதலாக ஒரு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 3 தொகுதிகளுக்கான கூடுதல் இயந்திரங்கள் கணினி மூலம் புதன்கிழமை (மாா்ச் 24) தோ்வு செய்யப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.