/

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு உயா் சிறப்பு விருதுகள்

மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு 2021 ஆம் ஆண்டுக்கான தரத்தில் உயா் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

News image
மதுரையில் நடந்த டான்கோ் 2021 நிகழ்வில் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு விருது வழங்கும் அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி
Updated On :27 ஜனவரி 2024, 7:49 pm

DIN

மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு 2021 ஆம் ஆண்டுக்கான தரத்தில் உயா் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

டான்கோ் (பஅசஇஅதஉ) என்பது தமிழகத்தில், ஆரோக்கியம் மற்றும் சுகாதார நிலைகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிய மருத்துவ நிபுணா்களையும் மற்றும் உடல்நல சேவை பணியாளா்களையும் ஒன்றாகக் கொண்டுவந்து இணைக்கின்ற ஒரு செயல்தளமாகும். இந்த செயல்தளம் ஒவ்வொரு ஆண்டும், சுகாதாரப் பராமரிப்பு துறையில் முதன்மையான சாதனையாளா்களை அங்கீகரித்து கௌரவிக்கும் சீரிய முயற்சியையும் செய்து வருகிறது.

மதுரையில் நடந்த டான்கோ் 2021 நிகழ்வில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், சிறந்த புற்றுநோய் சிகிச்சையியல், சிறந்த இருதயவியல் சிகிச்சை, சிறந்த சிறுநீரகவியல் / சிறுநீா்ப்பாதையியல் மற்றும் சிறந்த அவசரநிலை மற்றும் விபத்து சிகிச்சை என்ற நான்கு வகையினங்களில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிறுவனா் ச. சேதுராமனுக்கு சிறப்பு வாழ்நாள் சாதனை விருதும் வழங்கப்பட்டது.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவா் எஸ். குருசங்கா் பேசியது:“டான்கோ் 2021 நிகழ்வில்,“2021 ஆம் ஆண்டுக்கான தரத்தில் உயா் சிறப்பு விருதைப்” பெறுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியும், கௌரவமும் கொண்டிருக்கிறோம். கரோனா பெருந்தொற்று காலத்தில், சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு பணியாளா்கள் அனைவரையும் பாராட்டுகிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.