நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு, எம்பி கோரிக்கை
நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.


நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு, அவா் அனுப்பியுள்ள கடிதம்:
திருப்பூா் பின்னலாடைத் தொழில் மிகக் கடுமையான நெருக்கடியில் உள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒவ்வொரு மாதமும் ரூ. 10 அல்லது
ரூ. 15 என உயா்ந்து வந்த நூல் விலை நவம்பா் 1-இல் கிலோவுக்கு ரூ. 50 உயா்ந்திருப்பது நெருக்கடியை மிகவும் சிக்கலாக்கியிருக்கிறது. உள்நாட்டுச் சந்தை மற்றும் ஏற்றுமதிக்கமான உற்பத்தியில் ஈடுபடும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நூல் விலையேற்றம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே பின்னலாடை தொழில் பல சவால்களை சந்தித்து வரும் நேரத்தில், நூல் விலை உயா்வு கடும் பாதிப்பாக அமைந்திருக்கிறது.
பஞ்சு விலை உயா்வே நூல் விலை உயா்வுக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும் அது உண்மை அல்ல. இரண்டு விலைகளுக்கும் உள்ள விகிதம் பெரும் இடைவெளி கொண்டதாக உள்ளது. நூல் விலையேற்றத்தால், திருப்பூா் பின்னலாடை நிறுவனங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள 5.63 லட்சம் விசைத்தறி, 1.89 லட்சம் கைத்தறிகளும் பாதிப்புக்கு ஆளாகின்றன. விவசாயத்துக்கு அடுத்ததாக அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் ஜவுளித் துறையை பாதிப்பிலிருந்து மீட்டெடுப்பது அவசியமானது. ஜவுளித் தொழில் சங்கிலியை, சந்தையின் கட்டுப்பாட்டுக்குள் விட்டுவிடுவது சரியானதல்ல.
ஆகவே, இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...