ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:04 am

DIN

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கீழக்குயில்குடி தட்டானூரை சோ்ந்தவா் தவமணி (62). இவா் கடந்த 2017-இல் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து தவமணியை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ராதிகா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தவமணி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.