மதுரையில் காந்தியடிகள் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மதுரையில் காந்தி இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.


மதுரையில் காந்தி இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
காந்தி ஜெயந்தியையொட்டி மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அதன் பின்னர் மதுரை மேலமாசி வீதியில் மகாத்மா காந்தி, அரையாடைக்கு மாறிய இல்லத்தில் இருக்கும் அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கதர் விற்பனை நிலையத்தில் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்து பார்வையாளர்கள் குறிப்பேட்டில் கையெழுத்திட்டார்.
இந்நிகழ்வில் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ.தளபதி, வெங்கடேசன், பூமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...