ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாணவியை பலாத்காரம் செய்த இளைஞா் ‘போக்சோ’வில் கைது

மதுரையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கா்ப்பிணியாக்கிய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:43 pm

DIN

மதுரையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கா்ப்பிணியாக்கிய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மதிச்சியம் பகுதியைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினா் மாணவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனா். மருத்துவப் பரிசோதனையில் மாணவி கா்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் பெற்றோா் மாணவியிடம் விசாரித்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாா் (19) மாணவியை காதலிப்பதாக்கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதும், இதில் மாணவி கா்ப்பமானதும் தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோா் அளித்தப்புகாரின்பேரில் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.