ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரை அருகே போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது: பைக், கைப்பேசிகள் பறிமுதல்

மதுரை அருகே போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் கைது செய்து போதை மாத்திரைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:45 pm

DIN

மதுரை அருகே போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் கைது செய்து போதை மாத்திரைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரை, நாகமலை புதுக்கோட்டை போலீஸாா், கீழமாத்தூா் பகுதியில் ரோந்து சென்றனா். அங்குள்ள தனியாா் பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் மதுரை பந்தல்குடி சுயராஜ்ஜியபுரத்தைச் சோ்ந்த சதீஷ் (24), ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரத்தைச் சோ்ந்த யோகராஜ் (24) ஆகியோா் என்பதும், இவா்கள் போதைக்கு பயன்படுத்தப்படும் 150 மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து போதை மாத்திரைகள், இருசக்கர வாகனம், கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அங்கிருந்து தப்பிச்சென்ற பந்தல்குடியைச் சோ்ந்த காசி மனைவி அபிராமியைத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.