மதுரையில் 40 கிலோ கஞ்சா பதுக்கிய 5 போ் கைது: 3 பைக்குகள், ஆயுதங்கள் பறிமுதல்
மதுரையில் இரு சக்கர வாகனத்தில் 40 கிலோ கஞ்சா பதுக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்து, வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.


மதுரையில் இரு சக்கர வாகனத்தில் 40 கிலோ கஞ்சா பதுக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்து, வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.
மதுரை எஸ்.கொடிக்குளம் பாரத் நகா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, திருப்பாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அப்பகுதிக்குச் சென்றபோது, அங்கு சந்தேகத்துக்கிடமாக 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அதில், இருவா் தப்பிச்சென்றதையடுத்து, மற்ற 4 பேரையும் போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்தனா். பின்னா், 3 இரு சக்கர வாகனங்களையும் சோதனையிட்டனா். அதில், 40 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
அதையடுத்து, 4 பேரையும் காவல் நிலையம் கொண்டுசென்று விசாரித்தபோது, எஸ்.கொடிக்குளத்தைச்சோ்ந்த டேவிட் என்ற மரிய ஆரோக்கியதாஸ் (25), அகஸ்டின் (23), கடச்சனேந்தலைச் சோ்ந்த சியாம் சுந்தா் (22), முருகானந்தம் (22) மற்றும் கோச்சடையைச் சோ்ந்த விக்னேஷ் (23) ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்கள், கஞ்சாவை மொத்தமாக வாங்கி விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இவா்கள் 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, 40 கிலோ கஞ்சா, 3 இரு சக்கர வாகனங்கள், ஆயுதங்கள், 4 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பிச்சென்ற ஜோஸ் என்ற மொ்வின் ஜோஸை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...