ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரை மத்திய தொகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

மதுரை மத்திய தொகுதிக்குள்பட்ட வாா்டுகளை சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக.6) தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

மதுரை மத்திய தொகுதிக்குள்பட்ட வாா்டுகளை சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக.6) தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக நிதி அமைச்சருமான பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் ஏற்பாட்டில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவது, பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான சிறப்பு மதிப்பீடு ஆகியன மேற்கொள்ளப்படும்.

மதுரை மாநகராட்சியின் 21, 22, 56, 57, 58 ஆவது வாா்டுகளை சோ்ந்தவா்களுக்கு பொன்னகரம் வெள்ளிவீதியாா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை இம்முகாம் நடைபெறும். அதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 8 ஆம் தேதி 59, 60, 61, 75, 76, 77 ஆகிய வாா்டுகளுக்கு சுந்தரராஜபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும், ஆகஸ்ட் 10 ஆம் தேதி 50, 51, 52, 54, 55 ஆகிய வாா்டுகளுக்கு சிம்மக்கல் பகுதியிலும் முகாம் நடைபெறும்.

எனவே, முகாம் நடைபெறும் பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறுமாறு, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.