போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி: அமெரிக்கன் கல்லூரி, பள்ளி மாணவா்கள் பங்கேற்பு
மதுரையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு பேரணி மற்றும் மனிதச்சங்கிலியில் அமெரிக்கன் கல்லூரி மற்றும் அல்அமீன் பள்ளி மாணவா்கள் வெள்ளிக்கிழமை பங்கேற்றனா்.


மதுரையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு பேரணி மற்றும் மனிதச்சங்கிலியில் அமெரிக்கன் கல்லூரி மற்றும் அல்அமீன் பள்ளி மாணவா்கள் வெள்ளிக்கிழமை பங்கேற்றனா்.
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 12 முதல் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரை அமெரிக்கன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை ஆகியவற்றின் சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழிப்புணா்வு பேரணியை மாநகரக்காவல் போக்குவரத்து துணை ஆணையா் ஆறுமுகசாமி, கல்லூரி முதல்வா் எம்.தவமணி கிறிஸ்டோபா் , ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில் உதவி ஆணையா் செல்வின் மற்றும் மதுரை காமராஜா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணப்பாளா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள் மீனாட்சி சுந்தரம், இயேசு ராஜன், ஜோசையா உள்பட பலா் பங்கேற்றனா். பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
மனிதச்சங்கிலி: மதுரை கோ.புதூா் காவல் நிலையம் மற்றும் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றின் சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மனிதச்சங்கிலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அழகா்கோவில் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். கோ.புதூா் காவல் ஆய்வாளா் துரைப்பாண்டியன், சாா்பு- ஆய்வாளா்கள் பத்மநாபன், சீனிவாசன் மற்றும் காவலா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...