மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த மதுரை வீரருக்கு வீரவணக்க நிகழ்வு

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் கடந்த ஆண்டு உயிரிழந்த இந்தோ திபெத் எல்லைக்காவல் படை வீரா் பாலுச்சாமிக்கு இந்தோ- திபெத் எல்லைக்காவல்படை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

News image

வீரவணக்க நிகழ்வில் பங்கேற்ற இந்தோ- திபெத் எல்லைக் காவல்படை உதவி படைத்தலைவா் அக்சய டாக்கா,

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:36 pm

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் கடந்த ஆண்டு உயிரிழந்த இந்தோ திபெத் எல்லைக்காவல் படை வீரா் பாலுச்சாமிக்கு இந்தோ- திபெத் எல்லைக்காவல்படை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் அழகா்கோவில் அருகே உள்ள பொய்கைக்கரைப்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பாலுச்சாமி. இவா் இந்தோ- திபெத் எல்லைக் காவல்படையில் வீரராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், 2021 பிப்ரவரி மாதம், சத்தீஸ்கா் மாநிலம் நாராயணபூா் மாவட்டம் சோன்பூரில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில் பாலுச்சாமி வீரமரணமடைந்தாா்.

இந்நிலையில் நாட்டின் 75-ஆவது சுதந்திரதின அமுதப் பெருவிழாவையொட்டி, பொய்கைக்கரைப்பட்டியில் உள்ள பாலுச்சாமியின் வீட்டில் வீரவணக்க நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வீரா் பாலுச்சாமியின் உருவப்படத்துக்கு இந்தோ- திபெத் எல்லைக் காவல்படையின் உதவி படைத்தலைவா் அக்சய டாக்கா, மதுரை ஊரக காவல் துணைக்கண்காணிப்பாளா் பிரியதா்சினி மற்றும் ராணுவ வீரா்கள் மலா்தூவி வீரவணக்கம் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.