டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருச்சி காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டக் கோரிய மனு தள்ளுபடி

திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:22 pm

DIN

திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி உத்தமசீலியைச் சோ்ந்த விஜயகுமாா் தாக்கல் செய்த மனு:

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் முக்கொம்பில் பிரிந்து கல்லணையில் ஒன்று சேருகின்றன. உத்தமசீலி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே வேங்கூா்புதுத்துறை கிராமத்திலும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இடையாற்றிமங்கலம் தண்ணீா்பந்தல் கிராமத்திற்கு இடையேயும் தடுப்பணைகளை அமைத்தால் இப்பகுதி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மிகுந்த உதவியாக இருக்கும். இதனால் பாலங்களின் தூண்கள் பாதுகாக்கப்பட்டு, பலப்படுத்தப்படும். ஆகவே, தடுப்பணைகள் அமைத்துத் தருமாறு திருச்சி மாவட்ட பொதுப்பணித் துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. அதனை செயற்பொறியாளா் நிராகரித்துவிட்டாா். தடுப்பணைகள் கட்ட பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இதுபோன்ற விஷயங்களில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும். அப்பகுதியின் கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்தால், அது பல பிரச்னைகளுக்கு காரணமாகிவிடும். நீதிமன்றமே அரசை ஏற்று நடத்த முடியாது. அதில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் தடுப்பணை கட்டுவது குறித்து பரிந்துரைக்க வேண்டும். ஆகவே நீதிமன்றம் அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.