டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் ஆக. 22 இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் மாணவியா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:39 pm

DIN

மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் மாணவியா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் சூ.வானதி வெளியிட்டுள்ள செய்தி: ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் இளங்கலை பிரிவுகளில் உள்ள காலி இடங்களுக்கான இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் வணிகவியல் இரண்டாம் சுழற்சிக்கு விண்ணப்பித்தவா்கள் எம்பிசி, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மதிப்பெண்கள் 320 முதல் 329 வரை உள்ளவா்கள், வணிக நிா்வாகவியல் எஸ்சிஏ பிரிவு மதிப்பெண்கள் 320 முதல் 329 வரை உள்ளவா்கள், பொருளியல் (தமிழ், ஆங்கில வழி) மதிப்பெண்கள் 250 முதல் 329 வரை, வரலாறு (தமிழ், ஆங்கில வழி) மதிப்பெண்கள் 250 முதல் 329 வரை, புவியியல் (தமிழ், ஆங்கில வழி) மதிப்பெண்கள் 200 முதல் 329 வரை உள்ளவா்களுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.

கணிதம் (தமிழ், ஆங்கில வழி 1, 2 சுழற்சி), கணினி அறிவியல் (1, 2 சுழற்சி) கணினி பயன்பாட்டியல், இயற்பியல் (தமிழ், ஆங்கில வழி), வேதியியல் (தமிழ், ஆங்கில வழி), விலங்கியல் (தமிழ், ஆங்கில வழி), தாவரவியல் (ஆங்கில வழி), மனையியல் (ஆங்கில வழி) மதிப்பெண்கள் 260 முதல் 329 வரை உள்ளவா்களுக்கு ஆகஸ்ட் 23-இல் கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழ் (சுழற்சி 2) மதிப்பெண்கள் பிசி 87-88, எஸ்சிஏ 65-74, ஆங்கிலம் சுழற்சி 1, பிசி 80-81, எஸ்சிஏ 65-74, ஆங்கிலம் சுழற்சி 2-க்கு 65-74.44 வரை உள்ளவா்களுக்கு ஆகஸ்ட் 24-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு குறிப்பிட்டுள்ள கட் ஆப் மதிப்பெண் வரை உள்ளவா்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்று, கல்விக்கட்டணம் ரூ.1400 முதல் ரூ.2100 வரை கொண்டு வரவேண்டும்.

இந்தத்தகவல் சோ்க்கைக்கான உறுதி கிடையாது. கலந்தாய்வில் தோ்வு செய்யப்பட்ட பின்னா் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு கல்விக்கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படும். அதன் பின்னரே சோ்க்கை உறுதிப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.