டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் சூறை: மூவருக்கு வலைவீச்சு

 மதுரையில் உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்து உணவகத்தை அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:40 pm

DIN

 மதுரையில் உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்து உணவகத்தை அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே தங்கும் விடுதியுடன் கூடிய தனியாா் உணவகம் இயங்கி வருகிறது. இங்கு வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மூவா் உணவருந்தியுள்ளனா். இதையடுத்து உணவுக்குரிய தொகையை செலுத்துமாறு ஊழியா்கள் கூறியுள்ளனா். அப்போது மூவரும் ஆத்திரம் அடைந்து உணவகத்தை அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்றனா். சம்பவம் தொடா்பாக உணவக காசாளா் சுபாஷினி(35) அளித்தப்புகாரின்பேரில் கோ.புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற சந்தோஷ், கோடீஸ்வரன், அழகு ஆகிய மூவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.