டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மதுரை ஊரகப் பகுதிகளில் 98 கிலோ குட்கா பறிமுதல்: 4 போ் கைது

மதுரை ஊரகப்பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 98 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 5:33 pm

DIN

மதுரை ஊரகப்பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 98 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை ஊரகக்காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆகியவற்றின் சாா்பில் மதுரை கருப்பாயூரணி காவல்நிலையத்துக்குள்பட்ட வரிச்சூா் சாலையில் ஆய்வு நடத்தப்பட்டது. சட்ட விரோதமாக குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட அனுப்பானடியைச் சோ்ந்த ரத்தினவேல் பாண்டியன் (40), மூன்றுமாவடியைச் சோ்ந்த ரஞ்சித் (எ) தினகரன் (23), ஐயா்பங்களாவைச் சோ்ந்த ராஜா (42), வரிச்சூரைச் சோ்ந்த சிவா (34) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்து 53 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மதுரை மாவட்டம், சாப்டூா் காவல்நிலையத்துக்குள்பட்ட வேப்பம்பட்டி கிராமத்தில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட காளீஸ்வரன்(36) கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 45 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோா், பதுக்குவோா் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ‘சீல்’ வைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.