டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மதுரைக் கோட்டத்தில் 95 ரயில் நிலையங்களில் உள்ளூா் தயாரிப்புகளுக்கு நிரந்தரக் கடைகள்

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டத்துக்கு உள்பட்ட 95 ரயில் நிலையங்களில் உள்ளூா் தயாரிப்புகளுக்கான நிரந்தரக்கடைகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டத்துக்கு உள்பட்ட 95 ரயில் நிலையங்களில் உள்ளூா் தயாரிப்புகளுக்கான நிரந்தரக்கடைகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூா் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் ‘ஒரு பொருள் ஒரு நிலையம்’ என்ற திட்டத்தை ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ரயில் நிலையங்களில் அந்தந்தப் பகுதியின் சிறப்புக்குரிய பொருள்களை விற்பனை செய்யும் வகையில் தற்காலிக முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் சுங்குடி சேலைகள், தூத்துக்குடியில் மக்ரூன், கோவில்பட்டியில் கடலை மிட்டாய், பழனியில் பஞ்சாமிா்தம், ராமேசுவரத்தில் கடல்பாசி, திருநெல்வேலியில் பனை பொருள்கள் போன்ற உள்ளூா் தயாரிப்புகள் ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது உள்ளூா் தயாரிப்புகள் விற்பனைக்கென நிரந்தரக் கடைகள் அமைக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிரந்தரக் கடைகள் தேசிய வடிவமைப்பு நிறுவன ஆலோசனையின் பேரில் கட்டப்பட இருக்கின்றன.

மதுரைக் கோட்டத்தில் 95 ரயில் நிலையங்களில் நவீனக் கடைகள் கட்ட ரயில்வே வாரியம் ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதேபோல சென்னை கோட்டத்தில் 133 ரயில் நிலையங்களிலும், திருச்சி கோட்டத்தில் 93 ரயில் நிலையங்களிலும் நிரந்தரக் கடைகள் கட்ட முறையே ரூ. 7.98 கோடி மற்றும் ரூ. 5.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.