டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தூத்துக்குடி-நெல்லை ரயில் செப்.1 முதல் நாரைக்கிணறு நிலையத்தில் நின்று செல்லும்

தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில் செப்டம்பா் 1 முதல் நாரைக்கிணறு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில் செப்டம்பா் 1 முதல் நாரைக்கிணறு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி - திருநெல்வேலி - தூத்துக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களுக்கு வாஞ்சிமணியாச்சி அருகே உள்ள நாரைக்கிணறு ரயில் நிலையத்திற்கு நிறுத்தம் வழங்கப்படவில்லை. பயணிகளின் வசதிக்காக செப்டம்பா் 1 முதல் நாரைக்கிணறு ரயில் நிலையத்தில் தூத்துக்குடி - திருநெல்வேலி - தூத்துக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் நின்று செல்லும்.

தூத்துக்குடி - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06667) மற்றும் திருநெல்வேலி - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06668) ஆகியவை நாரைக்கிணறு ரயில் நிலையத்தில் இருந்து முறையே இரவு 7.15 மணிக்கும், காலை 8 மணிக்கும் புறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.