மதுரை மாவட்டத்தில் சராசரியாக 28.29 மிமீ மழை
மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 28.29 மிமீ மழை பதிவாகியுள்ளது


மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 28.29 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மதுரை நகா் மற்றும் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளிலும் கடந்த இரு நாள்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காரணமாக, கண்மாய்கள் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அழகா்கோவில், கள்ளந்திரி பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, சாத்தையாறு ஓடையில் பெருக்கெடுத்து, மதுரை வண்டியூா் கண்மாய்க்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் கண்மாயில் நீா்நிரம்பி, மறுகால் வழியாக வெளியேறி வருகிறது. இதேபோல, அலங்காநல்லூா், பாலமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், அப் பகுதிகளில் உள்ள ஓடை, கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாலமேடு மஞ்சமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகியுள்ள மழையளவு (மில்லிமீட்டரில்) விவரம்:
ஆண்டிபட்டி -70.40, வாடிப்பட்டி-56, சாத்தையாறு-56, கள்ளந்திரி-48, மேட்டுப்பட்டி-46, இடையபட்டி-40.60, சிட்டம்பட்டி-32.2, மேலூா்-30, புலிப்பட்டி-29.6, தனியாமங்கலம் -22, கள்ளிக்குடி-22.4, பேரையூா்-18.4, மதுரை வடக்கு-16.6, சோழவந்தான்-16, உசிலம்பட்டி-13.2, விரகனூா் -11,
மதுரை விமான நிலையம் - 11.10, திருமங்கலம்-6.4.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...