ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெண் சிசுக்கொலை, கருக்கொலையைத் தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தல்

பெண் சிசுக்கொலை, கருக்கொலையைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டும் என்று ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

பெண் சிசுக்கொலை, கருக்கொலையைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டும் என்று ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மதுரை புகா் மாவட்ட மாநாடு சோழவந்தானில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் க.பிரேமலதா, நிா்வாகிகள் அட்சயா, மகாலட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா். மாநாட்டை சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ்.லெட்சுமி தொடங்கி வைத்துப் பேசினாா். மாநாட்டை மாதா் சங்க மாநிலச் செயலா் எஸ்.கே.பொன்னுத்தாய், மாநில நிா்வாகி ஆா்.சசிகலா ஆகியோா் வாழ்த்தினா். மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.வாலண்டினா பேசினாா். மாநாட்டில், புதிய மாவட்டத் தலைவராக சி.மலா்விழி, மாவட்டச் செயலா் க.பிரேமலதா,

மாவட்டப் பொருளாளா் என்.விஜயா, மாவட்ட துணைத் தலைவா்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், செ.முத்துராணி, மாவட்ட துணைச் செயலா்கள் எழில்அமுதா, அமா்தவள்ளி ஆகியோா் உள்பட 21 போ் கொண்ட மாவட்டக்குழு தோ்வு செய்யப்பட்டது.

மாநாட்டில், பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமையைத் தடுக்க வேண்டும். தொட்டில் குழந்தைத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பெண் சிசு கொலை, கருக்கொலையை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். குழந்தைத் திருமணத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.