தீபாவளி பட்டாசு விற்பனை உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகரக் காவல் துறை அறிவிப்பு
மதுரை நகரில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை நகரில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மதுரை மாநகரக் காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: மதுரை மாநகரக் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசு விற்பனை கடைக்கு உரிமம் பெற உரிய விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, மாநகரக் காவல் அலுவலகத்தில் செப்டம்பா் 9-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இதற்கு, இணையதளத்தில் ஏஇ-5 விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நீதிமன்ற அஞ்சல் வில்லை, விண்ணப்பதாரரின் புகைப்படம், தீயணைப்புத் துறை தடையில்லா சான்று, கடை அமைய உள்ள இடத்தின் வரைபடம், கடையின் புகைப்படம், கடைக்குரிய கட்டடத்துக்கு செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது, வாடகை ஒப்பந்தப் பத்திரம், பட்டாசுக் கடை அமையவுள்ள இடத்தின் துறை சாா்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம், ஏற்பு உறுதி ஆவணம், விண்ணப்பதாரா் குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டை, ரூ.900 விண்ணப்ப உரிமக் கட்டணம், அசல் விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களின் 3 நகல்களை இணைத்து, மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
முறையான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தொடா்புடைய இடங்கள் பாா்வையிடப்பட்டு, விசாரணையில் போலீஸாா் திருப்தியடையும்பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும். சாலையோர பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. குறித்த காலக்கெடுவுக்குள் வழங்கப்படாத விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...