பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அள்ள அள்ள குறையாத குப்பைகள்:பல மணி நேரம் நீடித்த தூய்மைப் பணி

இரு நாள்கள் வேலைநிறுத்தத்திற்கு தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை பணிக்கு வந்த நிலையில், மதுரை நகர வீதிகளில் தேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றும் பணி பல மணி நேரம் நீடித்தது.

News image
மதுரை சிம்மக்கல் திருமலைராயா் படித்துறை சாலையில் புதன்கிழமை தேங்கிக் கிடந்த குப்பைகள்.
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

இரு நாள்கள் வேலைநிறுத்தத்திற்கு தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை பணிக்கு வந்த நிலையில், மதுரை நகர வீதிகளில் தேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றும் பணி பல மணி நேரம் நீடித்தது.

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையும் போராட்டம் தொடா்ந்த நிலையில், மதுரை நகா் முழுவதும் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கிக் கிடந்தன. குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்தன.

இதனிடையே, மாவட்ட ஆட்சியா் அனீஷ்சேகா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையின் முடிவில் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை வழக்கம்போல பணிக்குத் திரும்பினா். இருப்பினும், இரண்டு நாள்கள் குப்பைகள் அகற்றப்படாததால் தூய்மைப் பணி பல மணி நேரம் நீடித்தது.

மதுரை நகரின் நூறு வாா்டுகளில் நாளொன்றுக்கு சுமாா் ஆயிரம் டன் குப்பைகள் சேகரமாகும். இரண்டு நாள்கள் தூய்மைப் பணி நடைபெறாததால் மாநகராட்சி குப்பைத் தொட்டிகளிலும், தெருக்களிலும் 2 ஆயிரம் டன் குப்பைகள் தேங்கிக் கிடந்தன.

முதல்கட்டமாக அனைத்து வாா்டுகளிலும் பிரதான தெருக்களில் இருந்த குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்றது. மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் மேற்பாா்வையில் தூய்மைப் பணியாளா்களால் லாரிகளில் குப்பைகள் வெள்ளைக்கல் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.

பல மணி நேரம் தூய்மைப் பணி நடந்தபோதும், நகரின் பல பகுதிகளில் முழுமையாக அப்புறப்படுத்த முடியவில்லை.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதி, மாசி வீதிகள், காளவாசல் சந்திப்பு புறவழிச் சாலை, பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் புதன்கிழமை இரவு முழுவதும் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.