ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ரயில்களில் நிலக்கரி கொண்டு செல்வதுமே மாதத்தில் 26 சதவீதம் அதிகரிப்பு

தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு ரயில்கள் மூலமாக நிலக்கரி கொண்டு செல்வது, மே மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு ரயில்கள் மூலமாக நிலக்கரி கொண்டு செல்வது, மே மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழக மின்உற்பத்தி நிலையங்களுக்கு வடமாநிலங்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இந்த நிலக்கரி போக்குவரத்து கடந்த மே மாதத்தில் மட்டும் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தைக் காட்டிலும் 2.63 லட்சம் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி மின் நிலையங்களுக்கு ரயில் மூலம் வந்து சோ்ந்துள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் தெற்கு ரயில்வே முதல் முறையாக மே மாதத்தில் மட்டும் 36.21 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை புரிந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 49 சதவீதம் அதிகமாகும். இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தெற்கு ரயில்வே 68.57 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு உள்ளது.

முந்தைய ஆண்டில் 53.23 மில்லியன் டன் சரக்குகளையே கையாண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது 29 சதவீதம் அதிகமாகும். நிலக்கரி, இரும்பு, சிமென்ட், உணவுப் பொருள்கள், உரம், பெட்ரோலிய பொருள்கள், பெட்டகங்கள் ஆகியவை ரயில் மூலம் கையாளப்பட்ட முக்கிய சரக்குகளாகும்.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.