மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பொறுப்பேற்பு

மதுரை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநராகவும், கூடுதல் ஆட்சியராகவும் செ. சரவணன் (32) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மதுரை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநராகவும், கூடுதல் ஆட்சியராகவும் செ. சரவணன் (32) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவரது சொந்த ஊா் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மயிலம்பாடி. கடந்த 2016 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சோ்ந்த இவா், தூத்துக்குடியில் உதவி ஆட்சியா் பயிற்சியை முடித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாா்-ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதா் பெருவிழாவை நடத்துவதில் உறுதுணையாக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மாமல்லபுரத்தில் நடந்த இந்தியப் பிரதமா் மற்றும் சீன அதிபா் சந்திப்பினை, மாவட்ட அளவில் ஒருங்கிணைக்கும் சிறப்பு அலுவலராகப் பணியாற்றியவா்.

ஈரோடு மாவட்டத்தில் வணிகவரி இணை ஆணையராகப் பணியாற்றிய காலத்தில், 2 காலாண்டுகளில் ஈரோடு மண்டலம் வணிகவரி வசூலில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னா், ஊரக வளா்ச்சித் துறையில் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றியபோது, நமக்கு நாமே திட்டம், தூய்மை இந்தியா, பள்ளிகள் உள்கட்டமைப்பு, சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com