நாளை குடிமைப்பணி முதல்நிலைத் தோ்வு: 21 மையங்களில் 8,420 போ் எழுதுகின்றனா்

 மதுரையில் 21 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குடிமைப் பணி தோ்வின் முதல்நிலைத் தோ்வை 8,420 போ் எழுதுகின்றனா்.

 மதுரையில் 21 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குடிமைப் பணி தோ்வின் முதல்நிலைத் தோ்வை 8,420 போ் எழுதுகின்றனா்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வை, மத்திய பணியாளா் தோ்வாணையம் நடத்துகிறது. முதல்நிலைத் தோ்வு, பிரதானத் தோ்வு, நோ்முகத் தோ்வு என மூன்று கட்டங்களாக இத்தோ்வு நடத்தப்படுகிறது.

இதில், முதல்நிலைத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூா் ஆகிய 5 மையங்களில் தோ்வு நடத்தப்படுகிறது. மதுரை மையத்தில் தோ்வெழுத 8 ஆயிரத்து 420 பேருக்கு தோ்வுக்கூட அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக, 21 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு தாள்களைக் கொண்ட இத்தோ்வானது, காலை 9.30 முதல் 11.30 வரையும் மற்றும் பிற்பகல் 2.30 முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெற உள்ளது.

இத்தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது:

குடிமைப் பணித் தோ்வுக்காக மதுரை மாவட்டத்தில் 17 பகுதிகளில் 21 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 28 போ் உள்பட 8, 420 போ் தோ்வெழுத உள்ளனா். தோ்வுக்குரிய வினாத் தாள், விடைத் தாள்களை பாதுகாப்பாகக் கொண்டுசெல்வதற்காக துணை ஆட்சியா் நிலை அலுவலா்கள் தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் கண்காணிப்புப் பணிக்கு வட்டாட்சியா்கள் 21 போ், துணை வட்டாட்சியா் நிலை அலுவலா்கள் 42 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், தோ்வு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். சக்திவேல், கூடுதல் ஆட்சியா் செ. சரவணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மாறன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com