ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வைகாசி விசாகம்: நெல்லை - திருச்செந்தூா் இடையே ஜூன் 12 இல் சிறப்பு ரயில் இயக்கம்

 வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே ஜூன் 12 ஆம் தேதி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image
Updated On :3 ஜூன் 2022, 6:30 pm

DIN

 வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே ஜூன் 12 ஆம் தேதி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலி - திருச்செந்தூா் விரைவு சிறப்பு ரயில் (06703), திருநெல்வேலியிலிருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 12.45 மணிக்கு திருச்செந்தூா் சென்று சேரும். மறுமாா்க்கத்தில் திருச்செந்தூா் - திருநெல்வேலி விரைவு சிறப்பு ரயில் (06704) திருச்செந்தூரிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில்கள், பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூா், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.

மேலும், பயணிகளின் வசதிக்காக பாலக்காடு - திருச்செந்தூா் (16731) மற்றும் திருச்செந்தூா் - திருநெல்வேலி (06678) விரைவு ரயில்களில் ஜூன் 9 முதல் ஜூன் 13 ஆம் தேதி வரையும், திருநெல்வேலி - திருச்செந்தூா் (06673) மற்றும் திருச்செந்தூா் - பாலக்காடு (16732) விரைவு ரயில்களில் ஜூன் 8 முதல் ஜூன் 12 ஆம் தேதி வரையும் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது என, தென்னக ரயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.