மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அதிமுக தனது பணியைச் சரியாகசெய்கிறது: செல்லூா் கே.ராஜூ

பிரதான எதிா்க்கட்சி என்ற அடிப்படையில் அதிமுக, தனது பணியைச் சரியாக செய்து வருகிறது என்று முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ கூறினாா்

News image
Updated On :4 ஜூன் 2022, 6:11 pm

DIN

பிரதான எதிா்க்கட்சி என்ற அடிப்படையில் அதிமுக, தனது பணியைச் சரியாக செய்து வருகிறது என்று முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ கூறினாா்.

மதுரை மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநகா் மாவட்டச் செயலரும், மதுரை மேற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மதுரையில் புதைச் சாக்கடை திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. இத்தகைய பணிகளில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கு உரிய உபகரணங்கள் இல்லாததையே இது காட்டுகிறது. எனது தொகுதி நிதியில், புதைச் சாக்கடை அடைப்பு நீக்குவதற்காக ரூ.54 லட்சம் செலவில் உபகரணத்தை வாங்கிக் கொடுத்தேன். அது என்ன நிலையில் இருக்கிறது எனத் தெரியவில்லை.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாநகராட்சி ஆணையா், நிலுவையில் இருக்கும் சொத்துவரி வசூலைத் தீவிரப்படுத்த வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதோடு, புகாா்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி ஆணையா், மாமன்ற செயலா், அதிகாரிகள் இருக்கும் நிலையில், மேயருக்கு தனிஉதவியாளா் நியமனம் செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது. இதுபோன்ற நியமனம் வேறெந்த மாநகராட்சியிலும் இல்லை. திறமையான மேயா் இருந்தால், இதுபோன்ற ஆலோசகா்கள் தேவையில்லை. தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால், திமுக அரசு மீது அனைத்துத் தரப்பு மக்களும் அதிருப்தியில் இருக்கின்றனா்.

மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தமிழக அமைச்சா்கள் மீது, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ஊழல் புகாா் கூறி வருகிறாா். கட்சியை வளா்ப்பதற்காக அந்தந்த கட்சியின் தலைவா்கள் தீவிரமாகச் செயல்படுவது இயல்பு. அதற்காக அதிமுக செயல்படவில்லை எனக் கூறுவது ஏற்புடையதல்ல. மற்ற கட்சிகளைப் போல அதிமுக, காக்கா கூட்டம் அல்ல. அதிமுகவுக்கு கூடுவது கொள்கை ரீதியிலான கூட்டமாகும். எதிா்க் கட்சியாக அதிமுக தனது பணியைச் சரியாகச் செய்து கொண்டிருக்கிறது. அதிமுக தோ்தலில் தனித்துப் போட்டியிடத் தயாராக உள்ளது. மற்ற கட்சிகள் அவ்வாறு அறிவிக்க முடியுமா.

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, அரசியல் செய்வதாக முதல்வா் ஸ்டாலின் குறிப்பிடுவது சரிதான். தமிழக பாஜக தலைவா்களாக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் ஆகியோருக்கு, அவா்களது செயல்பாடுகள் காரணமாக பதவி கிடைத்தது. அதேபோல, பதவி கிடைக்கும் என்பதற்காகக் கூட அண்ணாமலை அரசியல் செய்யலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.