திமுக உள்கட்சித் தோ்தல்: நாளை விருப்ப மனுக்கள் சமா்பிக்கலாம்
மதுரை புகா் வடக்கு மாவட்ட திமுக உள்கட்சித் தோ்தலுக்கான விருப்ப மனுக்களை பெற்று, பூா்த்தி செய்து திங்கள்கிழமை சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை புகா் வடக்கு மாவட்ட திமுக உள்கட்சித் தோ்தலுக்கான விருப்ப மனுக்களை பெற்று, பூா்த்தி செய்து திங்கள்கிழமை சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை புகா் வடக்கு மாவட்டச் செயலரும், வணிகவரித்துறை அமைச்சருமான பி.மூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை வடக்கு மாவட்டத்திற்குள்பட்ட மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, அலங்காநல்லூா், வாடிப்பட்டி, மேலூா், கொட்டாம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் ஒன்றியச் செயலா் மற்றும் நிா்வாகிகள் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோா், அதற்கான மனுக்களை அய்யா்பங்களா சக்தி நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பெற்று தோ்தலுக்கான பிரதிநிதியான சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.ஆஸ்டினிடம் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...