மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பாம்பன் புதிய ரயில் பாலம் விரைவில் போக்குவரத்துக்குத் தயாராகும்: ரயில்வே அதிகாரிகள் தகவல்

 பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பு நிதியாண்டுக்குள் போக்குவரத்துக்குத் தயாராகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:10 pm

DIN

 பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பு நிதியாண்டுக்குள் போக்குவரத்துக்குத் தயாராகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ராமேசுவரம் தீவை தமிழகத்துடன் இணைக்கும் வகையில் பாக்நீரிணையில் பாம்பன் ரயில் பாலம் 1914-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பாம்பன் பாலத்தின் மையத்தில் கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக, பிரத்யேக தூக்கு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

மீட்டா் கேஜ் ரயில்களை இயக்கும் வகையில் கட்டப்பட்ட இப்பாலம், அகலப் பாதை ரயில் போக்குவரத்திற்கு ஏற்றவாறு 2006-07 இல் மாற்றப்பட்டது. இருப்பினும் நூறாண்டுகளைக் கடந்த பாலம் என்பதால், புயல்- மழை காரணமாக சேதம் அடைந்து வருகிறது. இதனையடுத்து புதிய பாலம் கட்டுவதற்காக 2019 ஆம் ஆண்டில் மத்திய அரசு ரூ.279 கோடி ஒதுக்கீடு செய்தது.

புதிய பாலம் 18.3 மீட்டா் உயரத்தில் 99 கிா்டா்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் மத்தியில் இருபுறங்களையும் இணைத்து லிப்ட் போல மேலே செல்லும் வகையில் தூக்கு பாலம் அமைய உள்ளது. பிற்காலத்தில் இரட்டை ரயில் பாதை அமையும் வகையில் தூண்கள் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு ரயில் பாதை அமைக்கும் வகையில் கிா்டா்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. கடல் மண் பரிசோதனை முடிவுகள் காரணமாக 1.5 மீட்டா் சுற்றளவுள்ள குவியல் முறை தூண்கள் அமைக்கப்படுகிறது. கிா்டா்கள் 18.3 மீட்டா் இரும்புத் தகடுகளால் உருவாக்கப்படுகிறது. இதனை பிரமாண்ட தூண்கள் மூலம் செங்குத்தாக உயா்த்தும் வகையில் மெகா லிப்ட் தயாராகி வருகிறது.

பாம்பன் பாலத்திற்கான கட்டுமானப் பணிகளை வடிவமைப்பதற்காக சத்திரக்குடி ரயில் நிலையத்தில் பிரமாண்ட தொழிற்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கட்டுமானப் பொருள்கள் சா்வதேச தரத்துடன் வடிவமைக்கப்பட்டு, பாம்பன் கடலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

பாம்பன் புதிய பாலத்தை சாலை போக்குவரத்து பாலத்துக்கு இணையாக 17 மீட்டா் வரை உயா்த்த முடியும். இதன் மூலம் பெரிய கப்பல்களும் ராமேசுவரம் வந்து செல்லலாம். பாம்பன் கடலுக்கு நடுவில் 35 மீட்டா் ஆழத்திற்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டு, தூண்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கான பணிகள் அடுத்த மாதம் முடியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பாம்பன் பாலம் நடப்பு நிதியாண்டில் போக்குவரத்துக்குத் தயாராகி விடும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.