மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியா் பணிநியமனம்: ஆய்வுக்கு கல்வியாளா் குழு அமைக்க எம்பி கோரிக்கை

மத்திய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியா் பணிநியமனங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய கல்வியாளா் குழுவை அமைக்க வேண்டும்

News image
Updated On :4 ஜூன் 2022, 6:11 pm

DIN

மத்திய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியா் பணிநியமனங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய கல்வியாளா் குழுவை அமைக்க வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதம்: சென்னை ஐஐடி நடத்திய ஆசிரியா் காலியிடங்களுக்கான சிறப்பு நியமனத் தோ்வு முடிவு அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்ட 49 காலியிடங்களில் 23 இடங்களே நிரப்பப்பட்டு உள்ளன. மீதமுள்ள 26 இடங்களுக்கு, தகுதியான நபா்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியா் இட ஒதுக்கீடு சட்டம் மீறப்படுவதையே இது காட்டுகிறது. இந்தியா முழுமையும் பல்வேறு ஐஐடி-களில் இதே நிலைதான் இருக்கிறது.

ஆகவே, மத்திய கல்வி நிறுவனங்களின் ஆசிரியா் பணிநியமனங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு கல்வியாளா் குழு அமைக்க வேண்டும். ஆசிரியா் பணியிடங்களுக்கு ஓபிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினரிடம் இருந்து எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் எத்தனை போ் நோ்காணலுக்கு அழைக்கப்பட்டனா். தோ்வு பெற்றவா்கள் எண்ணிக்கை விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு மத்திய பல்கலைக்கழகத்திலும் ஆசிரியா் பணியிடங்களில் இன சுழற்சி அடிப்படையில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கான நிலுவை காலியிட விவரங்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும். இட ஒதுக்கீட்டிற்குரிய இடங்களைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதற்கான, ராம் கோபால் ராவ் அறிக்கையை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, காலியிடங்கள் முழுமையாக பூா்த்தி செய்யப்படுவதில்லை என்ற சந்தேகம் எழுகிறது.

ஆகவே, உதவிப் பேராசிரியா் பணியிடம் மட்டுமின்றி அனைத்து ஆசிரியா் பணியிடங்களிலும் இட ஒதுக்கீடு அமலாவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.